Saturday, December 22, 2007

கல்வி


என்னுடய ஆரம்பகல்வி சி.எஸ்.ஐ. பள்ளியில் ஐந்து வருடம் வெட்டியா போச்சு அவ்வளவு நல்ல பள்ளி .இன்னும் எவ்வளவு பேர் வாழ்கையில் விளையாட போரார்களோ பாவம் என்னை போன்ற குழைந்தைகள்
அ டுத்து ஆர்.சி.நடுநிலைப்பள்ளி அங்கு ஒரு ஆசிரியை மண்டையை உடைத்து எங்கள் குலத்தொழில் விவசாயத்துக்கு அனுப்பிவைத்தார்
என் தந்தை இவ்வுலகை அங்கு தான் எனக்கு போதித்தார் .அவர் தான் எனக்கு உண்மையான ஆசிரியர் .உழைப்பு ,விடாமுயற்சி ,பொருளாதாரம் ,ஆரசியல் அனைத்து துறை ஆறிவும் கற்பித்தார் .கல்வி மீது இடுபாடு வந்தது
கல்வியின் மகத்துவம் உணர்ந்து நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆர்.சி.நாடுநிளைப்பள்ளி சென்றேன் .
இந்ததடவை என் இதயதெய்வம் மெட்ராஸ் டீச்சர் என்று அழைக்கப்படும் பாத்திமா லூர்துசாமி அவர்கள் ஆசிரியராகவந்தார்கள் ஒன்றாம் வகுப்பு தமிழ் நூல் எடுத்து சொல்லி தந்தார்கள் ஆறாம்வகுப்பில்.இரவு உணவுசமைத்து சாப்பிடும் வரை எனக்கு பாடம் நடத்துவர் அவர் வீட்டில் இப்ப நான் ஒரு M.A,PGDJMCஅடுத்து அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த மதுரை மாவட்ட கழிவுகளின் கூடாரம் ஆனால் ஆசிரியர்களை குறைகூற முடியாது .தமிழ் ஆசிரியர் மணி ஐயா ,கணித ஆசிரியை மீராய்பாய் ,இயற்பியலாசிரியர் ரமணி .ஆங்கில ஆசிரியர் சண்முகசுந்தரம் இவர்கள் குருப்பிடதக்கவர்கள்

அறிமுகம்



என்ன? எழுதழம் என்று இன்னும் முடிவு பண்ண வில்லை! நல்ல தகவல்கள் தரனும் என்று மட்டும் முடிவு பண்ணிவிட்டேன்.தலைப்பிட்டு ஒரு எல்லைக்குள் என்னை அடைபட்டிக்கொள்ள விருப்பம் இல்லை

நான் பிறந்தது மதுரை மாவட்டம் சோழவந்தானில் அவ்வுரை பற்றி முதலிளில் சொல்லிவிடுகிறேன்

சோழவந்தான் பெயர் காரணம்

ஒரு முறை சோழ மன்னன் மதுரைக்கு பாண்டியமன்னனை சந்திக்க இந்த ஊர் வழியாக செல்லும் பொது, இங்கு காணப்பட்ட பசூமையை கண்டு வியந்தமையல் சோழன் வந்து உவந்தான் என்று ஆனது பின் மறுவி சோழவந்தான் ஆனதுசோழமன்னர் இங்கு இரண்டு நாள் தங்கி பின் சென்றுள்ளார்அவருடன் வந்த போர்வீரர்கள் ஆலமரத்தின் கீழ் கொட்டம் ஆமைத்து தங்கி இடம் இன்று ஆலங்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது.
பெயர் வரலாறு
இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.
சோழவந்தான் வளம்

சோழவந்தான் சின்ன தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்டது.தஞ்சாவூர் விளைந்தால் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு.சோழவந்தான் விளைந்தால் தென் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்குதமிழகத்தின் இரணடவது மிகபெரிய கண்மாய் இன்குதான் உள்ளது.முதல் மிகபெரிய கண்மாய் இராமநாதபுரம் கண்மாய் ஆகும்.வெற்றிலை,வாழை,கரும்பு,தென்னை இந்த பகுதியில் நன்கு விளைகிறதுவெற்றிலை மும்பாய்க்கும்,கொல்கட்டவுக்கும். வாழை பெங்களுருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் {{coor d10.0167N77.9667E}} ஆகும்கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 [[மீட்டர்]] (419 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றதுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,661 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.